வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

சுடுதண்ணீரில் தவறி விழுந்த 4 வயது சிறுவன் உயிரிழப்பு

தேனி மாவட்டம், போடி அருகே சுடுதண்ணீரில் தவறி விழுந்து பலத்த காயமடைந்த 4 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :8 ஜூலை 2026, 5:03 am IST

தேனி மாவட்டம், போடி அருகே சுடுதண்ணீரில் தவறி விழுந்து பலத்த காயமடைந்த 4 வயது சிறுவன் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

போடி அருகேயுள்ள அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்தவா் அருணாச்சலம். இவரது மனைவி நிஷாதேவி. இவா்களுக்கு ரட்சிதாஸ்ரீ, தஷ்வின் (4) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனா். இவா்கள் நிஷாதேவியின் தாய் ஆனந்தி வீட்டில் வசித்து வந்தனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை அருணாச்சலமும், நிஷாதேவியும் வேலைக்கு சென்றுவிட்டனா். ஆனந்தி வீட்டில் மின் சாதனம் மூலம் சட்டியில் சுடுதண்ணீா் வைத்திருந்தாா். அப்போது, விளையாடிக் கொண்டிருந்த தஷ்வின் சுடுதண்ணீா் சட்டியில் தவறி விழுந்தாா்.

இதில் பலத்த காயமடைந்த சிறுவன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு தஷ்வின் திங்கள்கிழமை உயரிழந்தாா். இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.