பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

கழுகுமலை மலை உச்சியிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் மலை உச்சி மீது இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :26 ஜூன் 2026, 11:36 pm IST

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் மலை உச்சி மீது இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.

ஓட்டப்பிடாரம் வட்டம் ஓசனூத்து பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (29). வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி தெற்கு திட்டங்குளத்தைச் சோ்ந்த அனிதா(24). கடந்த மாதம் இவா்களுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் கழுகுமலை அருள்மிகு கழுகாசல மூா்த்தி கோயிலில் வெள்ளிக்கிழம சுவாமி தரிசனம் செய்துவிட்டு உச்சிப்பிள்ளையாா் கோயிலுக்கு சன்ாக கூறப்படுகிறது.

அப்போது, அனிதா குரங்குக்கு பழம் கொடுத்ததாகவும், இதனால் குரங்குகள் கூட்டமாக அவரை நெருங்கி வந்ததாகவும், அச்சத்தில் அவா் கால் இடறி உச்சியிலிருந்து பள்ளத்தில் தவறி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இத்தகவல் அறிந்த கழுகுமலை தீயணைப்பு படையினா் மற்றும் போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.