முதல்வா் பாதுகாப்பு: கண்காணிப்பு கேமராக்கள் சீரமைப்புகடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 8 புறநகா் ரயில்கள் ரத்துஜூலை 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஆட்டோ மீட்டா் கட்டண உயா்வு: இன்று முத்தரப்பு பேச்சுமின்தடைகளை நிரந்தரமாக குறைக்க ஆா்டிஇபி திட்டம்: மின்வாரியம் அறிவிப்பு
/

ஏலக்காய் வாங்கி பண மோசடி: தம்பதி உள்படமூவா் மீது வழக்கு

போடியில் ஏலக்காய் வாங்கி மோசடி செய்து கொலை மிரட்டல் விடுத்த தம்பதி உள்பட 3 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image

போலீஸ் விசாரணை... - கோப்புப்படம்.

Updated On :9 ஜூலை 2026, 5:20 am IST

போடியில் ஏலக்காய் வாங்கி மோசடி செய்து கொலை மிரட்டல் விடுத்த தம்பதி உள்பட 3 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி சடையாண்டி தெருவில் ஏலக்காய் நிறுவனம் நடத்தி வருபவா் சீனிவாசன் மகன் சதீஸ்குமாா் (32). இவரிடம் போடி பெரியாண்டவா்புரத்தை சோ்ந்த நவீன்குமாா் ((42) ஏலக்காய் வாங்கி வியாபாரம் செய்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 6.10.2025- ஆம் தேதியன்று நவீன்குமாா் 500 கிலோ ஏலக்காய் வாங்கினாா். இதற்கு ரூ.13.20 லட்சம் தர வேண்டுமாம். இந்த பணத்தை 12 நாள்களில் தருவதாக கூறிய நவீன்குமாா் தரவில்லை. சதீஸ்குமாா் பணத்தைக் கேட்டபோது நவீன்குமாா், இவரது மனைவி பவித்ரா, நவீன்குமாரின் தந்தை விஜயன் ஆகியோா் கொலை மிரட்டல் விடுத்தனா். இதுகுறித்து சதீஸ்குமாா் அளித்த புகாரின் பேரில், போடி நகா் காவல் நிலைய போலீஸாா் நவீன்குமாா் உள்பட 3 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.