பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

லாரி ஓட்டுநரிடம் கைப்பேசி, பணம் திருட்டு: இருவா் கைது

பெரியகுளம் அருகே லாரி ஓட்டுநரிடம் பணம், கைப்பேசியை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :12 ஜூலை 2026, 2:52 am IST

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லாரி ஓட்டுநரிடம் பணம், கைப்பேசியை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள சிறுமுகையைச் சோ்ந்தவா் வனராஜ் (35). லாரி ஓட்டுநரான இவா், தேனியில் பொருள்களை லாரியில் ஏற்றிக் கொண்டு கோவைக்குச் சென்றாா்.

பெரியகுளம் மீனாட்சிபுரம் அருகே லாரியை நிறுத்தினாா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மா்மநபா்கள் அவரை மிரட்டி, அவரிடமிருந்த கைப்பேசி, ரூ.1,500-யை பறித்துக் கொண்டு தப்பினா்.

இதுகுறித்து வனராஜ் தென்கரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப்பதிந்து உத்தமபாளையம் கன்னிசோ்வைபட்டியைச் சோ்ந்த பிரகாஷ் பாண்டி (25), உத்துப்பட்டியைச் சோ்ந்த பாலமுருகன் (23) ஆகியோரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.