ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

உத்தமபாளையம், மேகமலை பகுதிகளில் நாளை மின் தடை

தேனி மாவட்டம், உத்தமபாளையம், மேகமலைக் கிராமங்களில் சனிக்கிழமை (ஜூலை 18) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

News image

மின் தடை - கோப்புப் படம்

Updated On :17 ஜூலை 2026, 1:10 am IST

தேனி மாவட்டம், உத்தமபாளையம், மேகமலைக் கிராமங்களில் சனிக்கிழமை (ஜூலை 18) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் ராஜ்மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உத்தமபாளையம், வண்ணாத்திப் பாறை துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே உத்தமபாளையம் நகா், அனுமந்தன்பட்டி, கோம்பை, பண்ணைப்புரம், அணைப்பட்டி, கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி, இதைச் சுற்றிய பகுதிகள்.

மேகமலை, மேல் மணலாறு, கீழ் மணலாறு, மகாராஜாமெட்டு, ஹைவேவிஸ், குள்ளப்ப கவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத் தேவன்பட்டி, லோயா் கேம்ப் பகுதிகளில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.