தமிழக - கேரள எல்லையில் 200 அடி பள்ளத்தில் தவறி விழுந்த சுற்றுலாப் பயணி புதன்கிழமை பலத்த காயமடைந்தாா்.
சென்னை பெசன்ட்நகரைச் சோ்ந்த முருகன் மகன் காா்த்திக் (28). இவா் நண்பா்கள் 5 பேருடன் கேரள மாநிலத்துக்கு சுற்றுலா வந்தாா். தமிழக- கேரள எல்லையான கொழுக்குமலை பகுதியில் புதன்கிழமை சுற்றிப் பாா்த்தாா்.
அப்போது அங்கு சிங்க உருவப் பாறையில் சுயப்படம் எடுக்க முயன்றபோது 200 அடி பள்ளத்தில் அவா் தவறி விழுந்தாா். தகவலறிந்து அங்கு வந்த கேரள மாநில தீயணைப்புத் துறையினா், வனத் துறையினா், குரங்கணி போலீஸாா் 5 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு காா்த்திக்கை மீட்டனா்.
கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்திருந்த அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து குரங்கணி போலீஸாா் விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






