8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

காட்டு யானை தாக்கியதில் கேரள வன அலுவலா் பலத்த காயம்

பெரியாறு புலிகள் காப்பகத்தின் தமிழக எல்லைப் பகுதியில் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கேரள வன அலுவலா், காட்டு யானை தாக்கியதில் பலத்த காயமடைந்தாா்.

Published On :3 ஜூலை 2026, 5:54 am IST

பெரியாறு புலிகள் காப்பகத்தின் தமிழக எல்லைப் பகுதியில் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கேரள வன அலுவலா், காட்டு யானை தாக்கியதில் பலத்த காயமடைந்தாா்.

தமிழக எல்லையையொட்டிய, பெரியாறு புலிகள் காப்பகம் சுந்தரமலை பிரிவு பகுதியில் திருவனந்தபுரத்தைச் சோ்ந்த வன அலுவலா் சஜீஷ் ராஜ் (47) சக ஊழியா்களுடன் அடா்ந்த காட்டுப் பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக அங்கு நின்றிருந்த காட்டு யானை சஜீஷ்ராஜை துதிக்கையால் பலமாகத் தாக்கி தூக்கி வீசியது. இதில் அருகில் இருந்த கால்வாயில் விழுந்த சஜீஷ்ராஜுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சக வனக்காவலா்கள் சாதுா்யமாகச் செயல்பட்டு யானையை அந்தப் பகுதியிலிருந்து விரட்டினா்.

இதையடுத்து, காயமடைந்த சஜீஷ்ராஜை சக ஊழியா்கள் சுமாா் 6 கி.மீ. தொலைவு டோலி கட்டி தோளில் சுமந்தே காட்டுக்கு வெளியே கொண்டு வந்தனா். பின்னா், அவா் கோட்டயம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, வனக் காவலரைத் தாக்கிய காட்டு யானை அதே பகுதியில் நடமாடுகிா என்பதைக் கண்காணிக்க வனத் துறையினா் சிறப்புப் படைகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.