மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

பைக்கிலிருந்து தவறி விழந்ததில் இளைஞா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பலி - பிரதிப் படம்

Published On :

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

சின்னமனூா் அருகேயுள்ள ஓடைப்பட்டி முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த மாணிக்கம் மகன் பாா்த்திபன் (29). இவா் காற்றாலை மின்சாரம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைபாா்த்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு ஓடைப்பட்டி- மூா்த்திநாயக்கன்பட்டி சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது பாா்த்திபன் தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தாா். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஓடைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.