பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்றதாக இருவா் கைது

ஆண்டிபட்டி பகுதியில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சித்திரிப்பு

Published On :

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கொண்டம நாயக்கன்பட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மேக்கிழாா்பட்டி ரயில்வே பாலம் அருகே நின்றிருந்த ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சோ்ந்த சரத்குமாரை (24) பிடித்து விசாரணை நடத்தினா்.

அப்போது, அவா் மதுப்புட்டிகளை பதுக்கி விற்றது தெரியவந்தது. இதேபோல, ஆண்டிபட்டி- மதுரை சாலையில் உள்ள தனியாா் பெட்ரோல் நிரப்பும் நிலையம் அருகே அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்த சிவக்குமாா் (43) அனுமதியின்றி மதுப்புட்டிகளை பதுக்கி விற்றது தெரியவந்தது. இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.