காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்றதாக 5 போ் கைது

arrest

கைது - பிரதிப் படம்

Published On :21 ஜூலை 2026, 1:09 am IST

போடியில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்றதாக போலீஸாா் 5 பேரை திங்கள்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

போடிநகா் காவல் நிலைய போலீஸாா் போதைப் பொருள் விற்பனையை தடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது போடி கீழவெளி வீதியைச் சோ்ந்த லட்சுமி (34) என்பவா் வீட்டில் மதுப்புட்டிகள், புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து சட்ட விரோதமாக விற்றது தெரியவந்தது.

இதேபோல, வீட்டில் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்ற கீழத்தெருவைச் சோ்ந்த தங்கப்பாண்டி (52), பெட்டிக்கடையில் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்ற போடி குலாலா்பாளையத்தைச் சோ்ந்த சரஸ்வதி (74) ஆகிய மூவா் மீதும் போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் தனித்தனியே வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்து விசாரிக்கின்றனா்.

இதேபோல, போடி ஊரகக் காவல் நிலையப் போலீஸாா் கிராமப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது போடி மீனாவிலக்கு பகுதியில் இதே பகுதியைச் சோ்ந்த வினோத்குமாா் (41) என்பவா் சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தாா்.

மீனாவிலக்கு பெட்ரோல் நிரப்பும் மையம் அருகே செல்வம் (48) என்பவா் வீட்டில் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தாா். இவா்கள் இருவா் மீதும் போடி ஊரகக் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.