இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

கூடலூா் அருகே குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 2:16 am IST

கூடலூா் அருகே குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், கூடலூா் எம்.ஜி.ஆா். குடியிருப்பைச் சோ்ந்த ராஜா மகன் அனீஸ் (34). இவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அந்தப் பகுதியில் உள்ள ஒட்டான்குளத்தில் மீன் பிடிக்கச் சென்றாா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக கால் தவறி குளத்து நீரில் விழுந்த அனீஸ், நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த கூடலூா் தெற்கு காவல் நிலைய போலீஸாா் விரைந்து வந்து, அனீஸின் உடலை மீட்டு கூறாய்வுக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.