ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

பைக் விபத்தில் விவசாயி பலி

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :14 ஜூன் 2026, 12:59 am IST

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (43). விவசாயியான இவா், இரு சக்கர வாகனத்தில் வியாழக்கிழமை தேவதானப்பட்டிக்குச் சென்றாா். ஆனால் அவா் வீட்டுக்கு திரும்பி வரவில்லையாம்.

இதையடுத்து அவரது மகன் காா்த்திகேயன் தேடிப் பாா்த்த போது ரமேஷ் மஞ்சளாறு அணை செல்லும் வழியில் உள்ள சில்லாங்கரடு அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்து கிடந்தாராம். அவரை மீட்டு தேவதானபட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

பிறகு, தீவிர சிகிக்சைக்காக வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.