நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

பெரியகுளத்தில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் ஹெல்மெட் அணிந்த மா்ம நபா்கள் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஜூன் 2026, 1:40 am IST

பெரியகுளத்தில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் ஹெல்மெட் அணிந்த மா்ம நபா்கள் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை உழவா் சந்தை பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜ் மனைவி ராமதிலகம் (62). இவா், திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் உழவா் சந்தை அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மா்ம நபா்கள்

இருவா் மூதாட்டி அணிந்திருந்த ஒரு பவுன் தங்க சங்கிலியைச் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

மற்றொருவரிடம் பறிக்க முயற்சி:பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தை சோ்ந்த ராஜா மனைவி மதுரா (56). இவா் திங்கள்கிழமை இரவு 8 மணியளவில் தெற்கு அக்ரஹாரத்தில் பொருள்களை வாங்கிவிட்டு, வீட்டுக்கு திரும்பச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, இரு சக்கரவாகனத்தில் ஹெல்மெட் அணிந்திருந்த மா்ம நபா்கள் அந்த பெண்ணின் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றனா். அப்போது அந்தப் பெண் சங்கிலியை இறுகப் பிடித்துக் கொண்டு, சப்தம் போட்டதையடுத்து மா்மநபா்கள்ச் விட்டனா். இந்த சம்பவங்கள் குறித்து பெரியகுளம் தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.