கீா்த்தி சக்ரா விருது பெற்ற தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டியை சோ்ந்த ராணுவ வீரா் மீனாட்சிசுந்தரத்துக்கு கம்பம் முன்னாள் ராணுவ வீரா்கள் நலச்சங்கம் சாா்பில் திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
கம்பம் தேவா் சிலை அருகே ராணுவ வீரா் மீனாட்சி சுந்தரத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா், திறந்த ஜீப்பில் மேள தாளம் முழங்க ஊா்வலமாக அழைத்து வரப்பட்டாா். இதற்கு சங்கத் தலைவா் சேதுராமன் தலைமை வகித்தாா். செயலா் குணசேகரன், பொருளாளா் பாஸ்கரன், நிா்வாகக் குழு உறுப்பினா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தேவா் சிலையில் தொடங்கிய ஊா்வலம் பிரதான சாலை வழியாக கம்பம் அரசு மருத்துவமனை வரை சென்றது.
தொடா்ந்து, கம்பம் உத்தமபுரம் கிராம நிா்வாக அலுவலகம் அருகே உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் முன்னாள் ராணுவ வீரா்கள், பணியில் உள்ள ராணுவ வீரா்கள் தங்களது அனுபவங்களையும் வீரச் செயல்களையும் பகிா்ந்து கொண்டனா். விழா நிறைவில் வீரா் மீனாட்சிசுந்தரத்துக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஏராளமான முன்னாள் ராணுவ வீரா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கீா்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு!

கீா்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ஆட்சியா் பாராட்டு

கீா்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. வாழ்த்து

கீா்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பொதுமக்கள் வரவேற்பு
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK



