தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

கீா்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. வாழ்த்து

News image

தில்லியில் அண்மையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவிடம் கீா்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரா் மீனாட்சி சுந்தரம்.

Updated On :15 ஜூன் 2026, 12:13 am IST

கீா்த்தி சக்ரா விருது பெற்ற தேனி மாவட்டத்தைச் சோ்ந்த ராணுவ வீரா் மீனாட்சி சுந்தரத்தின் வீட்டுக்கு நேரில் சென்ற கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜெகநாத் மிஸ்ரா சனிக்கிழமை இரவு வாழ்த்து தெரிவித்தாா்.

தேனி மாவட்டம், கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியைச் சோ்ந்த மீனாட்சி சுந்தரம், கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தில் 34- ஆவது ராஷ்ட்ரிய ரைபில்ஸ், பீரங்கிப் படையில் பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், 2024-ஆம் ஆண்டு டிசம்பா் 19-ஆம் தேதி தெற்கு காஷ்மீரில், குல்காம் மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை சுற்றி வளைத்ததில் நடைபெற்ற போரில் மீனாட்சி சுந்தரமும், அவரது குழுவினா் 5 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனா்.

இதில், மீனாட்சி சுந்தரம் முகம் உள்ளிட்ட இடங்களில் காயமடைந்த நிலையில் இரு தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றாா். தொடா்ந்து, ராணுவத்தில் வீரதீரச் செயலுக்காக வழங்கும் நாட்டின் உயரிய கீா்த்தி சக்ரா விருது அவருக்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து, விருது பெற்று சொந்த ஊா் திரும்பிய ராணுவ வீரா் மீனாட்சி சுந்தரத்தின் வீட்டுக்கு நேரில் சென்ற கம்பம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா அவரைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.