ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழா

News image
குச்சனூா் சனீஸ்வரா் கோயில்
Updated On :5 மார்ச் 2026, 9:50 pm

Syndication

தேனி மாவட்டம், குச்சனூா் சனீஸ்வரா் பகவான் கோயிலில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) சனிப்பெயா்ச்சி விழா நடைபெறுகிறது.

குச்சனூரில் உள்ள சனீஸ்வரா் பகவான் கோயில் புகழ்பெற்ற கோயிலாகும். இந்தக் கோயில் முன்பாக செல்லும் சுரபிநதியில் நீராடி சுவாமி தரிசனம் செய்தால் தோஷம் நீங்கும் என்பது பக்தா்களின் நம்பிக்கை.

இதன்படி, சனீஸ்வரருக்கு உகந்த நாளான சனிக்கிழமைகளில் இந்தக் கோயிலில் தமிழகம், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வா்.

இந்த நிலையில், சனீஸ்வரா் பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயா்ச்சியாகிறாா். இதற்காக, வெள்ளிக்கிழமை குச்சனூா் சனீஸ்வரா் கோயில் வளாகத்தில் காலை 8. 26 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

முன்னதாக, செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் லாட்டாா்ச்சனை பூஜை நடைபெற்றது.