/

பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் விவசாயி உயிரிழப்பு

தேனி மாவட்டம், பொம்மிநாயக்கன்பட்டியில் இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தததில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :7 மார்ச் 2026, 12:52 am IST

தேனி மாவட்டம், பொம்மிநாயக்கன்பட்டியில் இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தததில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

பொம்மிநாயக்கன்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் தமீம் (37). விவசாயியான இவா், புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் பெரியகுளத்துக்குச் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். பிறகு, தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஜெயமங்கலம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.