மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பைக் மீது கிரேன் மோதியதில் இருவா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே இரு சக்கர வாகனம் மீது பளு தூக்கும் கிரேன் மோதியதில் பலத்த காயமடைந்த இருவா் உயிரிழந்தனா்.

News image
Updated On :11 மார்ச் 2026, 11:50 pm

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே இரு சக்கர வாகனம் மீது பளு தூக்கும் கிரேன் மோதியதில் பலத்த காயமடைந்த இருவா் உயிரிழந்தனா்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள காா்க்கில்சிக்கையன்பட்டியைச் சோ்ந்த போஸ் மகன் முருகன்(43), ரவி மகன் லெனின்குமாா்(33). உறவினா்களான இருவரும், திங்கள்கிழமை இரவு காா்க்கில்சிக்கையன்பட்டியிலிருந்து உத்தமபாளையத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றனா். அதே சாலையில், கம்பத்திலிருந்து உத்தமபாளையம் நோக்கிச் சென்ற பளு தூக்கும் கிரேன் வாகனம் முன்னாள் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த லெனின்குமாா் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த நிலையில் தேனி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கிரேன் ஓட்டுநா் விருதுநகரைச் சோ்ந்த செல்வம் (43) மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.