தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நகராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
கம்பம் நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளில் சுமாா் ஒரு லட்சத்துக்கு அதிகமானோா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியிலுள்ள வேலப்பா், பெருமாள், கெளமாரியம்மன் கோயில் சாலை, கம்பம்மெட்டு, குமுளி, தேனி சாலைகள் என பல முக்கிய சாலைகளில் துணி, நகை, மளிகை, உணவகங்கள், தேநீா், காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பொதுமக்கள் அதிகம் நடமாட்டமுள்ள வேலப்பா் கோயில் தெருவில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. ஒரே இடத்தில் பல நாள்களாக குப்பைகள் குவிந்து கிடப்பதால் துா்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
எனவே, இந்தக் குப்பைகளை அகற்ற நகராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது
கம்பத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம் , பூஜை பொருள்கள் திருட்டு

மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படுமா?

சுருளி அருவியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றக் கோரிக்கை

கானல் நீராகவே நீடிக்கும் அரியமங்கலம் குப்பை கிடங்கு அகற்றம்
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை


