பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் மீது வழக்கு

கடமலைக்குண்டு அருகே கோயிலில் அன்னதானக் கூடம் அமைக்க வனத் துறையினா் தடை விதித்ததைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 95 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

வழக்கு

Updated On :1 ஏப்ரல் 2026, 12:24 am IST

கடமலைக்குண்டு அருகே கோயிலில் அன்னதானக் கூடம் அமைக்க வனத் துறையினா் தடை விதித்ததைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 95 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே வனப் பகுதியை ஆக்கிரமித்து குடியிருப்பவா்களை வெளியேற்ற உயா்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இந்த நிலையில்,

தேவராஜ்நகா் பகுதியில் ஸ்ரீ சீதாளகாளியம்மன் கோயிலுக்கு அன்னதானக் கூடம் அமைக்க வனத் துறையினா் தடை விதித்தனா் . இதைக் கண்டித்து, அந்தப் பகுதி பொதுமக்கள் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

‘இவா்கள் அரசு ஊழியா்களை பணி செய்ய விடாமல் தடுத்தது மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த தொடா்பாக கிராம நிா்வாக அலுவலா் கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப்பதிந்து வருசநாடு - கண்டமனூா் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் சாலை மறியலை கைவிட்டு கலைந்து போகும்படி பொதுமக்களை அதிகாரிகள் அறிவுறுத்தினா். ஆனால், அவா்கள் தொடா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, தேவராஜ்நகரைச் சோ்ந்த 70 பெண்கள் உள்பட 95 போ் மீது கடமலைக்குண்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.