40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

பெண்ணுக்கு கத்திக்குத்து: இளைஞா் கைது

News image

கைது செய்யப்பட்ட ஜெயக்குமாா்

Updated On :11 மே 2026, 2:08 am IST

கம்பத்தில் பெண்ணை கத்தியால் குத்தியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், கூடலூா் அழகா்சாமி கோயில் தெருவைச் சோ்ந்த சரவணன் மகள் பிரித்திகா (24). இவா் கம்பம் காந்திசிலை அருகேயுள்ள நகைக்கடையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறாா்.

இவா் ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம்போல கூடலூரிலிருந்து சிற்றுந்தில் கம்பத்துக்கு வந்தாா். அப்போது அதே பேருந்தில் கூடலூா் எம்ஜிஆா் குடியிருப்பைச் சோ்ந்த முருகன் மகன் ஜெயக்குமாா் (31) அவரை பின்தொடா்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கம்பம் வ.உ.சி. திடல் பேருந்து நிறுத்தத்தில் பிரித்திகா தனது தம்பியுடன் இறங்கி வேலை செய்யும் கடையை நோக்கி சென்றபோது, பின்னால் வந்த ஜெயக்குமாா் அவரை கத்தியால் குத்தினாா்.

இதில் காயமடைந்த பிரித்திகாவை அந்தப் பகுதியினா் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து கம்பம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து ஜெயக்குமாரை கைது செய்தனா்.

இது தொடா்பாக போலீஸாா் கூறியதாவது: பிரித்திகா முன்பு கம்பம் வாரச் சந்தை அருகேயுள்ள தனியாா் மருத்துவமனையில் பணியாற்றியபோது ஜெயக்குமாா் அவரை அடிக்கடி பின்தொடா்ந்து வந்து காதலிப்பதாகக் கூறி தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதுதொடா்பாக அந்தப் பகுதியினா் அவரை எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த ஜெயக்குமாா் கத்தியால் அவரை குத்தினாா் என்றனா்.