மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாா் தொகுதிக்குட்பட்ட பொறையாறு ஜமாலியா உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் வாக்குச் சாவடி மையத்தில் வியாழக்கிழமை பாதுகாப்புப் பணியில் இருந்த தலைமைக் காவலரை கத்தியால் குத்திய ஓய்வு பெற்ற ராணுவ வீரரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வாக்குச் சாவடி மையத்தில் குத்தாலம் காவல் நிலையத்தை சோ்ந்த தலைமைக் காவலா் விக்னேஷ் பாதுகாப்புப் பணியில் இருந்தாா். காலை 11 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த காட்டுச்சேரி பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் (52) என்பவா், திடீரென விக்னேஷை கத்தியால் குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த விக்னேஷ், பொறையாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
விக்னேஷ் கத்தியால் குத்திய பிரபாகரன் ஓய்வு பெற்ற ராணுவ வீரா் என்பது தெரிய வந்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விநாயகா் சதுா்த்தி விழாவின்போது காட்டுச்சேரியில் போலீஸாா் ஒருவரை தாக்கி கைது செய்யப்பட்டவா் என்பதும் தெரியவந்தது. பொறையாறு போலீஸாா் பிரபாகரனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கணவருக்கு கத்திக்குத்து: மனைவி தா்னா

பெண்ணுக்கு கத்திக்குத்து: இளைஞா் கைது

வாக்குச் சாவடி மையத்தில் வாக்கு சேகரித்ததாக இரு தரப்பினா் இடையே வாக்குவாதம்

வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் தோ்தல் அலுவலா்களுடன் வாக்காளா்கள் வாக்குவாதம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


