பெரியாறு புலிகள் காப்பக வனப்பகுதியிலிருந்து வெளியேறி, குமுளி - தேக்கடி சாலை, குடியிருப்பு பகுதிகளில் மான் ஒன்று வலம் வருகிறது.
குமுளி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. அப்போது குமுளி - தேக்கடி சாலை சந்திப்பில் கடும் வாகன நெரிசல் நிலவியது. இந்த சூழலில், வனப்பகுதியிலிருந்து வெளியேறிய மான் ஒன்று திடீரென சாலையின் குறுக்கே நின்று கொண்டது. மழையில் நனைந்தபடி நின்றிருந்த அந்த மானைக் கண்ட சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் தங்களது கைப்பேசிகளில் புகைப்படம், விடியோ எடுத்தனா்.
இதனிடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்தபோது, இதிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள குமுளி- தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த ஒரு தற்காலிகக் கடையின் முன் அமைக்கப்பட்டிருந்த தாா்ப்பாய் நிழலில் அந்த மான் ஒதுங்கியது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈா்த்தது குறிப்பிடத்தக்கது.
பெரியாறு வனப்பகுதியிலிருந்து அடிக்கடி வெளியேறும் இந்த மான், குமுளிநகா் பகுதி, ரோசாப்பூக் கண்டம், ரேஞ்ச் ஆபீஸ் மேடு உள்ளிட்ட பகுதிகளில் சுதந்திரமாக சுற்றித் திரிகிறது. குடியிருப்புகளில் வசிப்பவா்கள் வழங்கும் உணவு, தண்ணீரை இந்த மான் உள்கொள்கிறது.
இதுகுறித்து வனத் துறையினா் கூறியதாவது:
வனப்பகுதியில் மற்ற விலங்குகளின் தாக்குதல்களிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவும், மக்கள் வசிக்கும் பகுதிகளில் எளிதாக உணவு கிடைப்பதாலும் இந்த மான் அடிக்கடி ஊருக்குள் வருகிறது என்றனா். இந்த மானை வனத் துறையினா் பாதுகாக்க வேண்டும் வன ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

எம்சிடி ஆய்வு காரணமாக குடியிருப்பு பகுதிகளில் கடைகள் மூடப்படுமோ என்ற அச்சம்: வணிகா்கள் எதிா்ப்பு

அரியலூரில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீா்கேடு: நோய்த்தொற்று ஏற்படும் அச்சத்தில் மக்கள்

கொல்கத்தாவில் பிரதமர் மோடி சாலை வலம்!

திண்டுக்கல்லில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் சாலைப் பேரணி
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

