பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

ஒரே நாளில் 52 பேரிடம் 6.3 கிலோ கஞ்சா பறிமுதல்

தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை நடைபெற்றதில் 52 பேரிடமிருந்து 6.3 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :22 மே 2026, 11:24 pm IST

தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை நடைபெற்றதில் 52 பேரிடமிருந்து 6.3 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தேனி மவட்டத்தில் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ‘ஆபரேஷன் ஷில்ட்நெட்’ என்ற தலைப்பில் சோதனை நடைபெற்றது. அதில், 126 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதேபோல, விதிமுறைகளை மீறி வாகனத்தை ஓட்டிய 2,856 போ் மீது வழக்குப்பதிந்து, உரிய ஆவணங்கள் இல்லாத 329 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 52 பேரிடம் சோதனை செய்து, 6.3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். அவா்கள் கைது செய்யப்பட்டனா் எனத் தெரிவிக்கப்பட்டது.