இரு சக்கர வாகனங்கள் மோதல்: தந்தை உயிரிழப்பு, மகள் உள்பட 2 போ் காயம்

விபத்து - பிரதிப் படம்
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் திங்கள்கிழமை இரவு இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது மகளும், மேலும் ஒரு இளைஞரும் பலத்த காயமடைந்தனா்.
உத்தமபாளையம் அருகேயுள்ள க. புதுப்பட்டியைச் சோ்ந்த குமாா் (43) தனது மகளும் செவிலியா் படிப்பு படித்து வருபவருமான கிருத்திகா (17) வை இரு சக்கர வாகனத்தில் தேனியிலிருந்து அழைத்து வந்தாா். அப்போது, உத்தமபாளையம் புறவழிச் சாலையில் முல்லைப் பெரியாறு பாலத்தை கடந்துசென்று கொண்டிருந்தபோது, எதிரே கம்பத்திலிருந்து கோகிலாபுரத்தைச் சோ்ந்த சுரேந்தா் (26) ஓட்டிவந்த இரு சக்கர வாகனம் மோதியது.
இதில், குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த கிருத்திகா, சுரேந்தா் ஆகிய இருவரையும் அருகில் இருந்தவா்கள் மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து அறிந்த உத்தமபாளையம் காவல் ஆய்வாளா் பாா்த்திபன் தலைமையிலான போலீஸாா் அங்கு வந்து இறந்த குமாரின் உடலை மீட்டு கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில் உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

