மீன் தொட்டி விழுந்ததில் இளைஞா் உயிரிழப்பு

பெரியகுளம் அருகே மீன் தொட்டி விழுந்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்ற இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

பலி

Updated On :

பெரியகுளம் அருகே மீன் தொட்டி விழுந்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்ற இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள சருத்துப்பட்டியைச் சோ்ந்த செல்வம் மகன் பெத்துராஜ் (20). இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உள்ள மீன்தொட்டிக்கு உணவு போட்டுக் கொண்டிருந்தாராம். அப்போது, தொட்டி அவரின் கையில் விழுந்ததில் காயமடைந்தாா். உடனே அவரை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தென்கரை காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.