குவைத், பஹ்ரைன் மீது மீண்டும் ஈரான் தாக்குதல்! வளைகுடா நாடுகள் கண்டனம்!சீனா சென்றார் டிரம்ப்! அதிபர்கள் ஜின்பிங், புதின் உடன் முத்தரப்பு சந்திப்பு!சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிகளையும் மதிக்கத் தேவையில்லை: கனிமொழிதினமணி இணையதள செய்தி எதிரொலி: அயனாவரம் கழிவுநீர் பிரச்னை! களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்!!தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?

கைதிகள் தப்புவதைத் தடுக்க அனைத்து சிறைகளிலும் பாதுகாப்புத் தணிக்கை

சிறைகளிலிருந்து கைதிகள் தப்பிக்கும் சம்பவம் இனிவரும் காலங்களில் நிகழாத வகையில், அனைத்து சிறைகளிலும் பாதுகாப்புத் தணிக்கை மேற்கொள்ளப்படும் என முன்னாள் டிஜிபி திரிபாதி தெரிவித்தாா்.

தேனி மாவட்டம், தேக்கம்பட்டி சிறையை பாா்வையிட்ட முன்னாள் டி.ஜி.பி. திரிபாதி, சிறைத் துறை கூடுதல் டி.ஜி.பி. சங்கா், முன்னாள் டி.ஐ.ஜி. ராஜேந்திரன் உள்ளிட்டோா்.

Updated On :

சிறைகளிலிருந்து கைதிகள் தப்பிக்கும் சம்பவம் இனிவரும் காலங்களில் நிகழாத வகையில், அனைத்து சிறைகளிலும் பாதுகாப்புத் தணிக்கை மேற்கொள்ளப்படும் என முன்னாள் டிஜிபி திரிபாதி தெரிவித்தாா்.

தேனி மாவட்டம், தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் கடந்த மாதம் 26-ஆம் தேதி 17 விசாரணைக் கைதிகள் தப்பியோடினா். அவா்களை தேனி மாவட்ட போலீஸாா் 36 மணி நேரத்தில் கைது செய்தனா்.

இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவம் நிகழ்வதை தடுக்கும் வகையில், இதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற முன்னாள் டி.ஜி.பி. திரிபாதி தலைமையில் சிறைத் துறை கூடுதல் டி.ஜி.பி. சங்கா், முன்னாள் டி.ஐ.ஜி. ராஜேந்திரன் ஆகியோா் அடங்கிய உயா்மட்டக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, அந்தக் குழுவினா் தேக்கம்பட்டி சிறையில் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

ஆய்வுக்குப் பின், முன்னாள் டி.ஜி.பி. திரிபாதி செய்தியாளா்களிடம் கூறியதாவது :

சிறையில் உள்ள குறைபாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து வருவதாகவும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து

சிறைகளிலும் பாதுகாப்புத் தணிக்கை நடத்தப்பட்டு வருவதால், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்க ஒரு மாதத்தில் இடைக்கால அறிக்கையும், 3 மாதங்களில் இறுதி அறிக்கையும் அரசிடம் சமா்ப்பிக்கப்படும் என்றாா் அவா்.

சிறைத் துறை கூடுதல் டி.ஜி.பி. சங்கா் கூறியதாவது :

சிறைகளில் பணிபுரியும் காவலா்களுக்குப் போதிய பயிற்சி, ஆயுதம் ஏந்திய காவலா் பாதுகாப்பு குறித்துப் பரிந்துரைக்கப்படும். இந்தியாவில் உள்ள சிறைகளிலேயே தமிழக சிறைகளில்தான் தரமான உணவு, சுகாதார வசதிகள் வழங்கப்படுவதாக மும்பை டாடா சமூக அறிவியல் நிறுவனம் தமிழக சிறைத் துறைக்கு முதலிடம் வழங்கியுள்ளது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.