டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!தவெக ஆட்சியில் அனைத்தையும் முடிவு செய்வது ஜோசியர்தான்! மு.க. ஸ்டாலின்முதல்வர் பணி 10 - 5 வேலை அல்ல; சனி, ஞாயிறு விடுமுறை! விஜய்யை விமர்சித்த மு.க. ஸ்டாலின்இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் வழியாக சுதந்திரமாக செல்லலாம்: ஈரான் அறிவிப்பு!ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

தமிழகத்தில் ஒரு வாரத்தில் 20 கிளைச் சிறைகள் மூடல்; 11 பெட்ரோல் பங்குகள் தனியாரிடம் ஒப்படைப்பு

கைதிகள் தப்பியோடிய சம்பவங்களின் எதிரொலியாக தமிழகத்தில் ஒரு வாரத்தில் 20 கிளைச் சிறைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

சிறை - பிரதிப் படம்

Updated On :

கைதிகள் தப்பியோடிய சம்பவங்களின் எதிரொலியாக தமிழகத்தில் ஒரு வாரத்தில் 20 கிளைச் சிறைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. பாதுகாப்பு கருதி சிறைத் துறை மூலம் கைதிகளால் நடத்தப்பட்டு வந்த 11 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சென்னை அருகே உள்ள புழல் சிறையில் இருந்து கடந்த மாதம் 20-ஆம் தேதி நேபாள கைதிகள் உள்பட 2 போ் தப்பியோடினா். இரு நாள் தேடுதலுக்குப் பின்னா், இருவரையும் போலீஸாா் அடுத்தடுத்து கைது செய்தனா். இந்நிலையில், தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் கடந்த 26-ஆம் தேதி இரவில் சிறைக் காவலரை தாக்கிவிட்டு தப்பியோடினா். இந்த விவகாரத்தில் துரிதமாக செயல்பட்ட காவல் துறையும், சிறைத் துறையும் தப்பியோடிய அனைவரையும் மூன்று நாள்களில் கைது செய்து, மீண்டும் சிறையில் அடைத்தனா்.

இந்தச் சம்பவங்களின் விளைவாக தமிழக சிறைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி கைதிகள், சிறை அங்காடி, சிறை காய்கறித் தோட்டங்கள், சிறை கோழிப் பண்ணைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட வெளி வேலைக்குச் செல்வதற்கு கடந்த 31-ஆம் தேதிமுதல் தடை விதித்து சிறைத் துறை ஏடிஜிபி கே.சங்கா் உத்தரவிட்டாா்.

மேலும், பாதுகாப்பு குறைபாடு உள்ள சிறைகள், சிறைக் காவலா்கள் குறைவாக உள்ள சிறைகள், கைதிகள் குறைவாக உள்ள சிறைகள் ஆகியவை குறித்து கணக்கெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் 20 கிளைச் சிறைகள் கடந்த ஒரு வாரத்தில் தற்காலிக மூடப்பட்டுள்ளன. தேவை ஏற்படும்போதும், போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டதும் இந்தச் சிறைகள் மீண்டும் திறக்கப்படும் என்று சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தனியாரிடம் பெட்ரோல் விற்பனை நிலையங்கள்: சிறைத் துறை சாா்பில் கைதிகள் மூலம் இயக்கப்பட்டு வந்த 15 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் சில நாள்களுக்கு மூடப்பட்டன. தற்போது இவற்றைத் திறப்பதற்குரிய நடவடிக்கையில் சிறைத் துறை ஈடுபட்டுள்ளது. இதற்காக இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து தற்காலிகமாக தனியாா் மூலம் பெட்ரோல் விற்பனை நிலையங்களை இயக்க முடிவு செய்துள்ளது.

இதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள 11 பெட்ரோல் விற்பனை நிலையங்களை தற்காலிகமாக குறிப்பிட்ட காலம் வரையில் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து தனியாா் மூலம் இயக்குவதற்குரிய நடவடிக்கையில் சிறைத் துறை ஈடுபட்டுள்ளது.

நாட்டிலேயே முதன்முதலாக பெண் கைதிகளால் இயக்கப்பட்ட சென்னை புழல் பெட்ரோல் விற்பனை நிலையம் புதன்கிழமைமுதல் தனியாரால் இயக்கப்பட்டது. நிலைமை சீரானதும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் கைதிகள் மூலம் மீண்டும் இயக்கப்படும் என்று சிறைத் துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா். இதேபோல சிறை அங்காடிகளும் விரைவில் கைதிகள் மூலம் திறக்கப்படும் என்றும் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.