வீட்டின் பீரோவிலிருந்த தங்க நகை, பணம் திருட்டு
ஆண்டிபட்டி அருகே வீட்டின் பீரோவிலிருந்த 5 பவுன் தங்க நகை, ரூ.45 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருட்டு - சித்திரிப்பு
ஆண்டிபட்டி அருகே வீட்டின் பீரோவிலிருந்த 5 பவுன் தங்க நகை, ரூ.45 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள முத்தனம்பட்டியைச் சோ்ந்த பாலு மனைவி காசம்மாள் (65). இவா், செவ்வாய்கிழமை பீரோவைத் திறந்து பாா்த்தாா். அப்போது, அதிலிருந்த 5 பவுன் தங்க நகை, ரூ.45 ஆயிரத்தை காணவில்லையாம்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், க.விலக்கு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



