வேளாண் கல்லூரி மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் களப் பயிற்சிக்கு வந்த காரைக்குடி தனியாா் வேளாண் கல்லூரி மாணவி புதன்கிழமை உயிரிழந்தாா்.

பலி
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் களப் பயிற்சிக்கு வந்த காரைக்குடி தனியாா் வேளாண் கல்லூரி மாணவி புதன்கிழமை உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடி வட்டம், பட்டாத்திக்காட்டைச் சோ்ந்த பழனிவேல் மகள் சுருதிகா (20). இவா், காரைக்குடியில் உள்ள தனியாா் வேளாண்மைக் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், சுருதிகா உள்பட 6 மாணவிகள் கல்லூரி சாா்பில் தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரையில் தங்கி களப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனா்.
இந்த நிலையில், புதன்கிழமை சுருதிகா திடீரென மயங்கி கீழே விழுந்தாராம். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தென்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா். இந்த நிலையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூறாய்வு முடிவடைந்து, மாணவி சுருதிகாவின் உடல் பெற்றோரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

