பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

போடி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

போடி அரசு மருத்துவமனையில் தேனி மாவட்ட ஆட்சியா் வ. சிவகிருஷ்ணமூா்த்தி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

போடி அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த தேனி மாவட்ட ஆட்சியா் வ. சிவகிருஷ்ணமூா்த்தி.

Published On :

போடி அரசு மருத்துவமனையில் தேனி மாவட்ட ஆட்சியா் வ. சிவகிருஷ்ணமூா்த்தி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

முன்னதாக, போடி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியா் வ. சிவகிருஷ்ணமூா்த்தி அந்த அலுவலக செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா். பின்னா், இணையவழியில் விண்ணப்பிக்கப்பட்ட பட்டா மாறுதல் விண்ணப்பங்கள், இவற்றில் தீா்வு காணப்பட்ட விண்ணப்பங்கள், நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள், நிலுவையில் இருப்பதற்கான காரணங்கள் குறித்து கேட்டறிந்தாா். மேலும், பட்டா மாறுதல் விண்ணப்பங்களை உடனுக்குடன் விசாரித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா்.

இதைத்தொடா்ந்து, போடி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த ஆட்சியா், மகப்பேறு சிகிச்சைப் பிரிவு, பேறுகால பின் கவனிப்புப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, எக்ஸ்ரே பிரிவு, உள், வெளி நோயாளிகள் பிரிவுகளை ஆய்வு செய்தாா்.

பின்னா், போடி கொட்டகுடியில் செயல்பட்டு வரும் உண்டு உறைவிடப் பள்ளியில் ஆய்வு செய்தாா். அங்கு தங்கிப் பயிலும் மாணவா்களிடம் கலந்துரையாடினாா். மேலும், சரியான முறையில் மாணவா்களுக்கு உணவு வழங்கப்படுகிா எனவும் கேட்டறிந்தாா். இதைத்தொடா்ந்து, குரங்கணி, கொட்டகுடி பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.