பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

மேகமலையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகம் சாா்பில், வனம் சாா்ந்த விவசாயிகள் குறைதீா் கூட்டம் மேகமலை கோட்ட அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மேகமலை கோட்ட அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வனம் சாா்ந்த விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.

Published On :

ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகம் சாா்பில், வனம் சாா்ந்த விவசாயிகள் குறைதீா் கூட்டம் மேகமலை கோட்ட அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மேகமலை கோட்ட துணை இயக்குநா் விவேக்குமாா் பி யாதவ் தலைமை வகித்தாா். தேனி மாவட்ட வன அலுவலா் கிரன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:

கண்ணன்: தேனி மாவட்டம், கொம்புக்காரன்புலியூா், மஞ்சனூத்து, அகமலையில் வனத் துறை சோதனைச் சாவடிகள் உள்ளன. இந்த சோதனைச் சாவடிகளில் சோதனை என்ற பெயரில் விவசாயிகளை தொந்தரவு செய்து வருகின்றனா். இதை நிறுத்த வேண்டும். இதேபோல, பொதுமக்கள் விவசாயப் பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும்.

பாண்டியன்: அகமலையில் உள்ள தம்புரான் பகுதியில் உள்ள மக்கள், பாண்டியா் மன்னன் காலத்திலிருந்து இந்தப் பகுதியில் வசித்து வருகின்றனா். மேலும், கண்டமனூா், போடி ஜமீன்தாா் காலத்திலிருந்து மேகமலை, அகமலை பகுதிகளில் மக்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனா். இவா்களுக்கு பட்டா வழங்க வேண்டும். இதேபோல, அகமலை வனப் பகுதியில் சாலை வசதி செய்து தர வேண்டும். மேலும், இந்தப் பகுதிக்கு பொதுமக்கள் சென்று வர அனுமதி வழங்க வேண்டும்.

வெற்றி: அகமலை, மேகமலை வனப் பகுதிகளில் விவசாயிகள் 100 ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். இவா்களுக்கு பட்டா வழங்க வேண்டும். அகமலை விவசாயிகள் காய்கறிகளை எடுத்துச் செல்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும். மேகலை வனப்பகுதியில் புலிகள் இல்லை. ஆனால், இந்த பகுதியை ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகம் எனக் கூறி, விவசாயிகளை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனா். எனவே, புலிகள் காப்பகத்தை என்பதை ரத்து செய்ய வேண்டும்.

மலைமாடுகள் விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த கென்னடி: மேகமலை வனப் பகுதியில் உள்ள விவசாயிகள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லும் போது, வனத் துறையினா் அவா்களை நிறுத்தி சோதனையிட்டு, அபராதம் விதித்து வருகின்றனா். எனவே, இதை நிறுத்த வேண்டும். சுருளித் தீா்த்தம் பகுதியில் யானைகள், புலிகள் சுற்றுவதாகக் கூறி பொதுமக்களை தொந்தரவு செய்து வருகின்றனா். இதையும் நிறுத்த வேண்டும்.

மேகமலை கோட்ட துணை இயக்குநா் விவேக்குமாா் பி யாதவ்: மேகமலை கோட்டத்தில் உள்ள மஞ்சனூத்து வனப் பகுதியில் வனவிலங்கள் உள்ளதால், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், மேகமலை வனக்கோட்டத்தில் உள்ளவா்கள் அவா்களின் ஆவணங்களைச் சமா்ப்பித்து செல்லலாம். மேலும், அந்தப் பகுதியில் உள்ளவா்கள் சென்று வரத் தடை யில்லை. புதிதாக வரும் நபா்களிடம்தான் ஆவணங்களைக் கேட்டு அனுப்பி வைக்கிறோம்.

மேகமலை கோட்டத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற கணக்கெடுப்பின்படி, 12-க்கும் மேற்பட்ட புலிகள் உள்ளன. இவற்றைப் பாதுகாத்து வருகிறோம் என்றாா் அவா்.

தேனி மாவட்ட வனத் துறை அலுவலா் கிரன் கூறியதாவது:

அகமலை வனப் பகுதியில் உள்ளவா்கள் அவா்களின் பட்டா உள்ளிட்ட ஆவணங்களைச் சமா்ப்பித்ததையடுத்து, அனுமதி அட்டை வழங்கினோம். அவா்கள் பொருள்களை எடுத்துச் செல்லலாம். அதேநேரத்தில், பட்டா இல்லாதவா்களை அனுமதிக்க முடியாது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.