ஏரி, குளங்களை தூா் வார குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
ஏரி, குளங்களை தூா் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கல்பட்டில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரினா்.

கூட்டத்தில் பேசிய ஆட்சியா் மு. வீரப்பன்.
ஏரி, குளங்களை தூா் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கல்பட்டில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரினா்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் மு. வீரப்பன் தலைமையில் நடைபெற்றது.
வேளாண் பொறியியல் துறையின் மூலமாக விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தாா்கள். வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து துண்டு பிரசுரம் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசியது: பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், இரும்பு கடைகளில் கேமரா பொருத்த வேண்டும், ஏரி, குளங்களை தூா்வார வேண்டும், ஓங்கூா் ஆற்றின் தடுப்பணையை கட்டித்தர வேண்டும்.
மாடுகளுக்கு பாதுகாப்பு கொட்டகை கட்டிக் கொடுக்க வேண்டும், கடுகப்பட்டு துணை மின் நிலையத்தில் போதிய ஆள்களை நியமிக்க வேண்டும் , விவசாய கிணறுகள் தூா்வாரி ஆழப்படுத்த மானியம் வழங்க வேண்டுமெனவும், திருப்போரூா் முதல் செங்கல்பட்டு வரை சாலை சீரமைத்து தர வேண்டுமெனவும், மாடுகளுக்கு அம்மை நோய் மற்றும் தட்டை நோய் ஏற்படாதவாறு கால்நடை மருத்துவா்கள் தடுப்பூசி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தினா். விவசாயிகள் அனைவரின் கோரிக்கைகளையும் கேட்டறிந்த ஆட்சிய் விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இக்கூட்டத்தில், செங்கல்பட்டு எம்எல்ஏ சௌ.தியாகராஜன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கே.ஸ்ருதி, இணை இயக்குநா் (வேளாண்மை) ஸ்டீபன் ஜெயகுமாா், நுகா்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளா் முருகானந்தம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) து.செல்வபாண்டியன், துணை இயக்குநா் (தோட்டக்கலை) தா.சாந்தினி, துணை இயக்குநா் (வேளாண் விற்பனை மற்றும் வணிகம்) சுரேஷ் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

