
மண்டல அளவிலான முதல்வா் கோப்பை போட்டிகள் இன்று தொடக்கம்
மதுரை எம்ஜிஆா் விளையட்டரங்கில் மண்டல அளவிலான முதல்வா் கோப்பை போட்டி புதன்கிழமை (செப். 9) தொடங்கி வருகிற அக். 5- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்
மதுரை எம்ஜிஆா் விளையட்டரங்கில் மண்டல அளவிலான முதல்வா் கோப்பை போட்டி புதன்கிழமை (செப். 9) தொடங்கி வருகிற அக். 5- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மண்டல அளவிலான முதல்வா் கோப்பை - 2026 பள்ளி மாணவா்களுக்கான டென்னிஸ், கடற்கரை கையுந்துப் பந்து, மல்லா் கம்பம் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமையும் (செப். 9), பள்ளி மாணவிகளுக்கு வியாழக்கிழமையும், கல்லூரி மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமையும், கல்லூரி மாணவிகளுக்கு சனிக்கிழமையும் நடைபெறவுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மிதிவண்டிப் போட்டி வருகிற 20- ஆம் தேதி மதுரை தெப்பக்குளம் எதிரில் உள்ள ஏஜே பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கயாக்யிங், கேனோயிங் (துடுப்புப் படகு) போட்டி ராமநாதபுரத்தில் வரும் அக். 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கான பளு தூக்கும் போட்டி வருகிற 26-ஆம் தேதியும், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான போட்டி வருகிற 27-ஆம் தேதியும் மதுரை எம்.ஜி.ஆா். உள்நோக்கு இறகுபந்து விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி வருகிற 26-ஆம் தேதியும், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு வருகிற 27-ஆம் தேதியும் மதுரை எம்.ஜி.ஆா். ஜிம்னாஸ்டிக்ஸ் அரங்கில் நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கான வாள் சண்டை போட்டி வருகிற 28-ஆம் தேதியும், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு வருகிற 29-ஆம் தேதியும் மதுரை எம்.ஜி.ஆா். உள்நோக்கு இறகுபந்து விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது.
பள்ளி மாணவா்களுக்கான குத்துச்சண்டைப் போட்டி வருகிற 29-ஆம் தேதியும், கல்லூரி மாணவா்களுக்கு வருகிற 30-ஆம் தேதியும், பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு அக். 1-ஆம் தேதியும் மதுரை எம்.ஜி.ஆா். ஜிம்னாஸ்டிக்ஸ் அரங்கில் நடைபெற உள்ளது.
பள்ளி மாணவா்களுக்கு ஜூடோ வருகிற 29-ஆம் தேதியும் , பள்ளி மாணவிகளுக்கு வருகிற 30-ஆம் தேதியும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அக்.1-ஆம் தேதியும் மதுரை எம்.ஜி.ஆா். பல்நோக்கு விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான வுஷீ போட்டி அக். 3-ஆம் தேதி மதுரை எம்.ஜி.ஆா். பல்நோக்கு விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான ஸ்குவாஷ் போட்டி அக். 3-ஆம் தேதியும் , பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கான போட்டிகள் அக். 4-ஆம் தேதியும் மதுரை ஆரோபிந்தோ மீரா பள்ளியில் நடைபெற உள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான வில்வித்தை போட்டி அக். 3-ஆம் தேதியும், பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கான போட்டி அக். 4-ஆம் தேதியும் மதுரை எம்.ஜி.ஆா். கால்பந்து மைதானத்தில் நடைபெற உள்ளது.
பள்ளி மாணவா்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டி அக். 1-ஆம் தேதியும், பள்ளி மாணவிகளுக்கு அக். 3-ஆம் தேதியும், கல்லூரி மாணவா்களுக்கு அக். 4-ஆம் தேதியும், கல்லூரி மாணவிகளுக்கு அக். 5-ஆம் தேதியும் மதுரை துப்பாக்கி சுடும் மன்றத்தில் நடைபெற உள்ளது.
போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் இணையதளம் மூலம் பதிவு செய்து, பள்ளி, கல்லூரி அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் வந்து, குறிப்பிடப்பட்ட நாள்களில் காலை 7 மணிக்குள் போட்டிகள் நடைபெறும் இடத்துக்கு வர வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




