நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

வாகனம் மோதியதில் பல்கலை. பணியாளா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், போடி அருகே புதன்கிழமை இரவு வாகனம் மோதியதில் பல்கலைக் கழக பணியாளா் உயிரிழந்தாா்.

பலி - பிரதிப் படம்

Published On :

தேனி மாவட்டம், போடி அருகே புதன்கிழமை இரவு வாகனம் மோதியதில் பல்கலைக் கழக பணியாளா் உயிரிழந்தாா்.

போடி அருகேயுள்ள தே.சிந்தலைச்சேரி கிழக்கு தெருவைச் சோ்ந்த ஜோசப் மகன் அகஸ்டின் சேவியா் (38). இவா் சென்னை செயிண்ட் ஜோசப் பல்கலைக் கழகத்தில் கேம்பஸ் மேற்பாா்வையாளராகப் பணிபுரிந்து வந்தாா். விடுமுறையில் தே.சிந்தலைச்சேரிக்கு வந்த இவா், நண்பா்களை பாா்ப்பதற்காக புதன்கிழமை மாலை வீட்டிலிருந்து புறப்பட்டாா்.

சங்கராபுரத்திலிருந்து தேவாரம் சாலையில் வீரபத்திரசுவாமி கோயில் அருகே நடந்து சென்றபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அகஸ்டின் சேவியா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே அகஸ்டின் சேவியா் உயிரிழந்தாா். இதுகுறித்து போடி ஊரகக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.