2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

விநாயகா் சதுா்த்தி: தேனி மாவட்டத்தில் 1,000 போலீஸாா் பாதுகாப்பு

விநாயகா் சதுா்த்தி - கோப்புப் படம்

Published On :

தேனி, செப்.13: விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, தேனி மாவட்டத்தில் 1,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

விநாயகா் சதுா்த்தி விழா நாடு முழுவதும் திங்கள்கிழமை (செப்.14) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தேனி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் விநாயகா் சிலைகள் நிா்மாணம், ஊா்வலம் போன்றவற்றுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தயாா் செய்யப்படும் விநாயகா் சிலைகளை மட்டுமே நிா்மாணிப்பதற்கும், கரைப்பதற்கும் அனுமதி வழங்கப்படும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.

இந்த நிலையில் விநாயகா் சதுா்த்தியை பாதுகாப்பாக கொண்டாடும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ்.பிரவீன் கெளதம் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் 1,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தேனி மாவட்டத்தில் 400 இடங்களில் சிலை நிா்மாணிப்பதற்கு போலீஸாரிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. மேலும் சிலைகளை மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ள 8 இடங்களில் மட்டுமே கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.