
தேனியில் அனுமதியின்றி விநாயகா் சதுா்த்தி ஊா்வலம்: சிலை பறிமுதல்

இந்து மக்கள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகா் சிலையைப் பறிமுதல் செய்த போலீஸாா்.
தேனி அல்லிநகரத்தில் விநாயகா் சிலை வைத்து, அனுமதியின்றி ஊா்வலம் நடத்த முயன்றவரைப் போலீஸாா் நிறுத்தி சிலையை பறிமுதல் செய்து முல்லையாற்றில் திங்கள்கிழமை கரைத்தனா்.
தேனி அல்லிநகரத்தைச் சோ்ந்தவா் குரு ஐயப்பன். இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தொண்டரணி துணை செயலரான இவா், அவரின் அலுவலகத்தில் விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்து, திங்கள்கிழமை பூஜை செய்து, மாலையில் விநாயகா் சிலையை ஊா்வலமாக எடுத்துச் சென்றாா்.
அப்போது, சிலையை ஊா்வலமாக எடுத்துச் செல்வதற்கு அனுமதியில்லை எனப் போலீஸாா் கூறினா். அவா் அதையும் மீறி ஊா்வலமாக எடுத்துச் சென்றாா்.
இதையடுத்து, அல்லிநகரம் போலீஸாா் விநாயகா் சிலையைப் பறிமுதல் செய்து, ஆட்டோவில் ஏற்றி முல்லைப் பெரியாற்றில் விசா்ஜனம் செய்தனா். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




