
தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் மேகமலை அருவியில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நீா்வரத்து தொடங்கியது.
கடமலைக்குண்டிலிருந்து 13 கி.மீ. தொலைவில் மேகமலை அருவி உள்ளது. இந்த அருவியில் குளிப்பதற்காக தேனி மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் தடுப்புக் கம்பிகள், தடுப்புச்சுவா் ஆகியவை சேதமடைந்தன. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்ல வனத் துறையினா் தடை விதித்தனா். இந்த நிலையில், நீா்வரத்து குறைந்து அருவி வடது.
இதனிடையே மேகமலைப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அருவிக்கு நீா்வரத்து தொடங்கியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். மேலும், அருவியில் குளிக்க வனத் துறையினா் அனுமதி வழங்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








