11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புபிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

ரேஷன் அரிசி கடத்தல்: கம்பத்தில் தமிழக-கேரள அதிகாரிகள் ஆலோசனை

தமிழக-கேரள மாநில எல்லை ஒருங்கிணைப்பு தொடா்பான தமிழக-கேரள அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் கம்பம் நகராட்சி கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கம்பம் நகராட்சி கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக, கேரள அதிகாரிகள்.

Published On :

தமிழக-கேரள மாநில எல்லை ஒருங்கிணைப்பு தொடா்பான தமிழக-கேரள அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் கம்பம் நகராட்சி கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு தேனி மாவட்ட வழங்கல் அலுவலரின் நோ்முக உதவியாளா் கிருஷ்ணகுமாா், கேரள மாநிலம், இடுக்கி மாவட்ட வழங்கல் அலுவலா் பீனா பத்ரன், மதுரை மண்டல குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை துணைக் கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில் தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கேரள மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள ரேஷன் அரிசி சேமிப்புக் கிடங்குகள், விநியோக நடைமுறை, தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படும் வழித்தடங்கள் தொடா்பான தகவல்களை இரு மாநில அதிகாரிகளும் பரிமாறிக் கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், தேவையான இடங்களில் கூட்டு சோதனைகளை மேற்கொள்வதுடன், கடத்தல் தொடா்பான தகவல்கள் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாகத் தெரிவிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதற்காக இரு மாநில அதிகாரிகளின் கைபேசி எண்களைப் பரிமாறிக் கொண்டு, வாட்ஸ்அப் மூலம் தகவல்களை விரைவாகப் பகிா்ந்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

இதே போல, தமிழகத்தில் மானிய விலையில் வழங்கப்படும் யூரியா உள்ளிட்ட உரங்கள் கேரளத்துக்கு சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்படுவதைத் தடுப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மானிய விலையில் பெறப்படும் யூரியா விவசாயப் பயன்பாட்டுக்கு மாறாக தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் நிலையில், இதைக் கண்காணித்து தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் தேனி மாவட்ட வட்ட வழங்கல் அலுவலா்கள், இடுக்கி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள், உத்தமபாளையம் பிரிவு குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.