திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

சத்துணவு ஊழியர் சங்க மாநாடு

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க அருப்புக்கோட்டை கிளையின் 12-ஆவது மாநாடு, மெக்கா தொடக்கப் பள்ளியில் கிளைத் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

Updated On :28 ஏப்ரல் 2013, 7:05 pm

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க அருப்புக்கோட்டை கிளையின் 12-ஆவது மாநாடு, மெக்கா தொடக்கப் பள்ளியில் கிளைத் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

   அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் உலகநாதன் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினார். கிளைச் செயலாளர் ராஜாராம் அறிக்கை வாசித்தார். அரசு ஊழியர் சங்கம் பொன்ராஜ், ராமராஜ், வருவாய் அலுவலர் சங்கம் ராமநாதன், வருவாய் கிராம உதவியாளர் சங்கம் சுப்பிரமணியன், ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் சங்கம் மாயமாலை ஆகியோர் வாழ்த்தினர்.

   சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் முனியசாமி, பொருளாளர் சுப்புக்காளை ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டில் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தலைவராக நாகஜோதி, செயலாளராக சோலைச்சாமி, பொருளாளராக சேஷன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

   மாவட்டச் செயலாளர் அய்யம்மாள் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார். ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் கவுரவிக்கப்பட்டனர். மாநாட்டில் 150 ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.