தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

அரசு பேருந்து சிறை பிடிப்பு

திருச்சுழி அருகே வெள்ளிக்கிழமை அரசு பஸ்சை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

Updated On :13 டிசம்பர் 2013, 6:49 pm

திருச்சுழி அருகே வெள்ளிக்கிழமை அரசு பஸ்சை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

     திருச்சுழி அருகே ஆலடிபட்டி, கல்யாண சுந்தரபுரம், கல்லுமடம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 300 பேர் முத்துராமலிங்கபுரம், கல்லூரணி, அருப்புக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கட்டட வேலை மற்றும் பெயிண்டிங் பணிக்காக செல்வது வழக்கம். இக்கிராமங்களுக்கு அருப்புக்கோட்டையில் இருந்து அதிகாலை 4.20 மணிக்கு புறப்படும் அரசு பஸ் ஆலடிபட்டி, கல்யாணசுந்தரபுரம், கல்லுமடம் வழியாக அம்மன்பட்டி கிராமத்திற்கு செல்கிறது. மீண்டும் காலை 7.15 மணிக்கு அம்மன்பட்டியிலிருந்து புறப்பட்டு திரும்புகிறது. இந்த பஸ் சில நேரங்களில் காலை 6.15 மணிக்கே வந்து விடுகிறது.

    இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் சிரமமடைந்து வருகின்றனர். கடந்த 15 நாள்களுக்கு முன் அரசு பஸ் வராததால் ஆட்டோவில் மாணவர்கள் பள்ளி சென்றனர். அப்போது அந்த ஆட்டோ கவிழ்ந்து மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். இதனால், கிராம மக்கள் அருப்புக்கோட்டை அரசு போக்குவரத்துக் கழக டெப்போவுக்கு சென்று மனு கொடுத்தனர். அதில் காலை 7.30 மணிக்கு ஆலடிபட்டியிலிருந்து புறப்படும் வகையில் பஸ்சை இயக்க கோரிக்கை விடுத்திருந்தனர். ஒரு சில நாள்கள் இயக்கப்பட்ட அந்த பஸ் மீண்டும் வரவில்லை. இதன் காரணமாக கிராம மக்கள் வெள்ளிக்கிழமை ஆலடிபட்டிக்கு வந்த அரசு பஸ்சை சிறை பிடித்தனர்.   இதுகுறித்து தகவலறிந்த திருச்சுழி இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதை அடுத்து கிராம மக்கள் பஸ்ûஸ விடுவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.