திருச்சுழி அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும், இம் மருத்துவமனையில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருந்து சிகிச்சை அளிக்க வேண்டும், மருத்துவமனைக்கு என ஆம்புலன்ஸ் சேவை ஏற்படுத்தி தரவேண்டும் என்று வலியுறுத்தியும், குண்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சுழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
நகரச் செயலாளர் சீனிவாசக பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட குழு செயலாளர் சேகர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன், ஒன்றியச் செயலாளர் அன்புசெல்வன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மண்டாடி தமிழ்ப் புத்தாண்டு போஸ்டர்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா புதிய சாதனை!

ஆஷா போஸ்லே மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ஆஸி. கிரிக்கெட் வீரர்!

அதீத பேட்டரி திறன்... இன்ஃபினிக்ஸ் நோட் 60 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

