சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகளாகியும் அரசு பஸ்ஸே வராத கிராமம்
நாடு சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இதுவரை ஒரு நாள்கூட அரசு பஸ்ஸே வராத தலித் கிராமம் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ளது.


நாடு சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இதுவரை ஒரு நாள்கூட அரசு பஸ்ஸே வராத தலித் கிராமம் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வன்னியம்பட்டி விலக்கு, இனாம்கரிசல்குளம், பெருமாள்தேவன்பட்டி, பிள்ளையர்குளம், பழைய செந்நெல்குளம், கீழராஜகுலராமன், புதூர், தொம்பக்குளம், காளவாசல் வழியே ஆலங்குளத்திற்கு காலை அரசு நகர் பேருந்து சென்று திரும்புகிறது. பின்னர் காலை 8.45 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து பெருமாள்தேவன்பட்டிக்கு வன்னியம்பட்டி விலக்கு, இனாம்கரிசல்குளம் வழியே ஒரு அரசு நகர் பேருந்து
சென்று வருகிறது. பல கிராமங்கள் உள்ள இந்த வழித்தடத்தில் ஏனைய நேரங்களில் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு நல்ல வசூல் கிடைக்கிறது. இந்த வழித்தடத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் இருப்பவர்கள் விவசாயம் சார்ந்த தொழில் செய்து வருபவர்கள். மேலும் இந்த வழித்தடத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்ட சிறிய கிராமங்கள் உள்ளது. இங்கிருந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் இலவச பஸ் பாஸ் இருந்தும் அதனை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளார்கள்.
இனாம் கரிசல்குளத்திற்கும் பெருமாள்தேவன்பட்டிக்கும் இடையே பி.ராமச்சந்திரபுரம் ஊராட்சிக்குட்பட்ட கீழப்பொட்டல்பட்டி என்னும் கிராமம் உள்ளது. இது இந்த பிரதான சாலையில் இருந்து 2 கி.மீ. தூரம் உள்ளே அமைந்துள்ளது. இங்கு சுமார் 320 தலித் குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்திற்கு சுதந்திரம் அடைந்து சுமார் 68 ஆண்டுகள் ஆகியும் ஒரு நாள் கூட அரசுப் பேருந்து வந்தது கிடையாது. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை உழவர் சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றாலும் மினி பஸ்ஸைத்தான் பணம் கொடுத்து பயன்படுத்த வேண்டும். இங்குள்ள மாணவ மாணவியர் பஸ் பாஸ் இருந்தும் அதைப் பயன்படுத்த இயலாது. சரியான போக்குவரத்து வசதியில்லாத காரணத்தால் மேல்படிப்பு கூட தொடர இயலாத நிலையில் இக் கிராம வாசிகள் உள்ளார்கள். இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் சாலை வசதி வன்னியம்பட்டி விலக்கில் இருந்து சத்திரப்பட்டி வரை இரு வழிச் சாலையாக சிறப்பாக உள்ளது. அரசுப் பேருந்துகளை கூடுதலாக இயக்கினால்
போக்குவரத்துக் கழகத்திற்கு கூடுதல் லாபம் கிடைக்கும். இந்த வழித்தடத்தில் வரும் அரசு நகர் பேருந்துகளை 2 கி.மீ. தூரம் உள்ள கீழப்பொட்டல்பட்டிக்குள் சென்று திரும்ப ஏற்பாடு செய்தால், கிராம் எல்லாவகையிலும் முன்னேற்றம் அடையும் என்றனர்.
இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்குவரத்துக் கழக பணிமனை கிளை மேலாளரை நாம் பல முறை தொடர்பு கொள்ள முயன்று முடியவில்லை.
மாவட்ட நிர்வாகம் கீழபொட்டல்பட்டி கிராமத்திற்கு அரசு நகர் பேருந்து சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...