தலைமையாசிரியர்களுக்கான தலைமைப்பண்பு, இதுவரை பள்ளிச்சுழலில் தலைமையாசிரியர்கள் சந்தித்த பிரச்சனைகளும், அவற்றை கையாண்ட விதமும், வெற்றிகளும், பள்ளி நிர்வாகம், உள்ளார்ந்த மேற்பார்வைகளும், ஆய்வுகளும், உறுதிவாய்ந்த நேர்மறையான ஆளுமைத்திறன், தொடர்பு கொள்ளும் திறன் சார்ந்த வளர்ச்சி, பிரச்சனைகளைக் கண்டறிந்து தீர்வுகாணும் திறன், நேர்மையாக முடிவெடுக்கும் திறன், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் 2009, மாணவர்களுக்கான வழிகாட்டுதலும்-அறிவுரைபகர்தலும், யோகா, தியானம், மனவள கலை மன்ற செயல்பாடுகள், உடல்நலக்கல்வி, தன் சுத்தம், சுற்றுச்சுழல் விழிப்புணர்வு, நேர மேலாண்மை, மன அழுத்த மேலாண்மை, பள்ளி வளர்ச்சித்திட்டம், நிதி மேலாண்மை, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு, வளரறி மற்றும் தொகுத்தறி செயல்பாடுகள், வகுப்பு வாரியாக ஒவ்வொரு பாடத்திலும் உள்ள கடினமான பகுதிகளை எளிமையாக கற்பிக்கும் முறைகள், வகுப்பறை ஆங்கிலம் போன்ற தலைப்புகளில் பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாள் பயிற்சியின் இறுதியில் அன்றைய தலைப்பு சார்ந்த கலந்துரையாடல் நடைபெறும் என்று கூறினார்.