அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கலசலிங்கம் பல்கலை.யில் பி.ஆர்க். நுழைவுத் தேர்வு நேட்டா மையம்: இந்திய கட்டடக்கலை கழகம் அனுமதி

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பி.ஆர்க் என்னும் கட்டடக்கலை பட்டப்படிப்பு உள்ளது. இதில் சேர்வதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றதுடன், நேட்டா என்ற அகில இந்திய ஆர்க்கிடேக்சர்

News image
Updated On :6 பிப்ரவரி 2013, 9:22 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பி.ஆர்க். நுழைவுத் தேர்வு நேட்டா மையம் அமைக்க மும்பையில் உள்ள இந்திய கட்டடக்கலை கழகம் அனுமதி அளித்துள்ளது.இது குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் பி.கன்னியப்பன் (படம்) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பி.ஆர்க் என்னும் கட்டடக்கலை பட்டப்படிப்பு உள்ளது. இதில் சேர்வதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றதுடன், நேட்டா என்ற அகில இந்திய ஆர்க்கிடேக்சர் கவுன்சில் கணினி மூலம் நடத்தும் நுழைவுத் தேர்வு எழுதி 40 சதவீதம் மதிப்பெண்களுக்கு குறையாமல் எடுக்க வேண்டும். இதுவரை இந்த நேட்டா தேர்வு எழுத சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களுக்குத்தான் செல்ல வேண்டும்.தற்போது மும்பையில் உள்ள ஆர்க்கிடேச்சர் கவுன்சில் ஆப் இந்தியா, கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பி.ஆர்க். கட்டடக்கலை நுழைவுத் தேர்வு மையம் (நேட்டா மையம்) ஏற்படுத்திக்கொள்ள அங்கீகாரம் அளித்துள்ளது. இதற்கான ஆணை கிடைக்கப்பெற்றுள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் எங்கு சென்று பி.ஆர்க். படிக்க விரும்புவோரும், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பி.ஆர்க். படிக்க விரும்புவோரும் இங்கு இந்த நுழைவுத் தேர்வை எழுதலாம். கணினி வாயிலாக இந்தத் தேர்வு நடக்கும்.தற்போது இந்த நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியும் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்படவுள்ளது. இங்குள்ள பயிற்சி மையத்தில் சேர்ந்து ஒரு மாத பயிற்சிக்குப்பின் இந்த நுழைவுத் தேர்வை எழுதலாம். பயிற்சி மையத்தில் மிகவும் திறமைமிக்க கட்டடக்கலைத் துறை பேராசிரியர்கள் பயிற்சி அளிப்பதுடன், வெவ்வேறு புத்கங்கள் அடங்கிய ஆங்கில நூலகமமும் இடம்பெறும். பயிற்சி மையத்தில் சேர்வது மற்றும், நுழைவுத் தேர்வு குறித்து விவரம் அறிய 90003-61330 எனற செல்போனில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர். அப்போது பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன், பேராசிரியர் டாக்டர் பி.ஜி.குருசாமிபாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.