அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ராஜபாளையத்தில் நகர் புற மகளிருக்கான சமையல் கலை பயிற்சி

விருதுநகர் மாவட்ட மக்கள் கல்வி நிறுவனம் சார்பில், நகர்ப்புற மகளிருக்கான சமையல் கலை மற்றும் பழங்கள்,

News image
Updated On :9 பிப்ரவரி 2013, 7:31 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்ட மக்கள் கல்வி நிறுவனம் சார்பில், நகர்ப்புற மகளிருக்கான சமையல் கலை மற்றும் பழங்கள், காய்கறிகளை பதப்படுத்துதல் குறித்த 25 நாள் பயிற்சி தொடக்க விழா ராஜபாளையத்தில் நிறுவனத்தின் இயக்குநர் இ.விஜயலட்சுமி தலைமயில் இன்று நடைபெற்றது.

பயிற்சி தொடங்கி வைத்து பேசுகையில் அவர் கூறியதாவது: இன்றைய பொருளாதார உயர்வு காரணமாக நமது பாரம்பரிய சமையலுடன் சேர்ந்து பல்வேறு நாட்டு உணவு வகைகளையும் சுவைக்க வேண்டும் என்ற எண்ணம் நகர் பகுதி மக்களிடத்தில் பெருகிவிட்டது. அதன் காரணமாக பாஸ்ட்புட் கடைகளும், ரெஸ்டாரண்டுகளும் பெருகிவிட்டன. மக்களும் உணவு வகைகளுக்கு அதிக பணம் செலவழிக்கவும் தயாராகி விட்டனர். இதனைக் கருத்தில் கொண்டுதான் மக்கள் கல்வி நிறுவனம் இப் பகுதியைச் சார்ந்த பெண்களுக்கு துரித உணவு தயாரித்தலுடன், பழங்கள், காய்கறிகள் பதப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல், பழ ஜாம், ஊறுகாய் வகைகள், சூப் வகைகள் போன்றவற்றை தயாரிப்பதற்கான பயிற்சிகளும் இங்கு வழங்கப்பட்டு வருகிறது. இப் பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் தங்கள் குடும்பத்திற்கு மட்டும் அல்லாமல், ஒரு குழுவாக செயல்பட்டு துரித உணவு கடைகள் மூலமாகவோ அல்லது வீட்டில் இருந்தபடியாகவோ பழ ஜாம், கேரட் ஜாம், ஊறுகாய் போன்றவை தயாரித்து சந்தையில் விற்பனை செய்து வருமானம் ஈட்ட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

பயிற்சியில் துரித உணவு வகைகளான நூடுல்ஸ், பிரைடு ரைஸ், சிக்கன் வகைகள், கோபி மஞ்சூரியன், காளான் உணவு வகைகள், செட்டி நாடு உணவு வகைகள், மசாலா பவுடர் தயாரித்தல், பழங்கள், காய்கறிகள் பதப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல், சைனீஸ் வகைகள், பழ ஜாம், ஊறுகாய் வகைகள், சூப் வகைகள் உள்ளிட்டவை தயாரிக்க பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியில் 35 பயனாளிகள் கலந்து கொண்டுள்ளனர்.

பயிற்சி தொடக்க விழாவில் திட்ட அலுவலர் கிருஷ்ணசாமி வரவேற்றார். பயிற்சியை மக்கள் கல்வி நிறுவனத்தின் பயிற்றுநர் சிவக்குமார் அளிக்கிறார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை  பயிற்றுநர் வைரவேல் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.