ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம், கடம்பன்குளம் கிராமத்தில் ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.3 லட்சத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் நியாயவிலைக் கடைப் பணிகளையும், ஆலத்தூரில் ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நியாயவிலைக் கடைப் பணியையும் ஒன்றியக் குழுத் தலைவர் கி.காளிமுத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணியாளர்களிடம், வேலை தரமானதாகவும், முதல்வருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தரும் வகையிலும் நியாயமான முறையில் நடைபெறவேண்டும். இதனை அலுவலர்கள் மேற்பார்வை செய்து உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.அவருடன் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் வெள்ளைச்சாமி, சந்திரசேகர், ஒன்றியக் குழு துணைத் தலைவர் முத்தாலம்மாள், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் சென்றிருந்தனர்.