2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

அறிவுத் திறன் போட்டி: ஸ்ரீவிலி. லயன்ஸ் பள்ளி சிறப்பிடம்

ஏ.ஐ.எஸ். கணினி நிறுவனம் ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியருக்கு நடத்திய அறிவுத் திறன் போட்டியில் மாணவர்கள் சிறப்பிடம் பெற்று வெற்றி பெற்றனர்.

News image
Updated On :10 ஜனவரி 2013, 2:46 pm

கே.ஜெயக்குமார்

ஏ.ஐ.எஸ். கணினி நிறுவனம் ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியருக்கு நடத்திய அறிவுத் திறன் போட்டியில் மாணவர்கள் சிறப்பிடம் பெற்று வெற்றி பெற்றனர்.

இந்த நிறுவனம் மாணவ மாணவியருக்கிடையே கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி உள்ளிட்ட போட்டிகளை நடத்தியது. இதில் 89 மாணவ மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இறுதிப் போட்டி மங்காபுரம், இந்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் 12 மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் மூவர் முதல் பரிசையும், இருவர் இரண்டாம் பரிசையும் வென்றனர்.

இவர்களுக்கு ஏ.ஐ.எஸ். கணினி நிறுவனம் பதக்கம், கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கியது.

அறிவுத் திறன் போட்டியில் சிறப்பிடம் பெற்று வெற்றி பெற்ற மாணவ மாணவியரை பள்ளியின் செயலர் மற்றும் தாளாளர் எஸ்.ஆர்.முருகராஜன், தலைவர் எஸ்.குணசேகரன், பொருளாளர் எம்.கே.முகமது மைதீன், முதல்வர் ஜி.எஸ்.ராஜேந்திரன், துணை முதல்வர் டி.முத்துக்குமார், தலைமை ஆசிரியை ஜே.ஜெயசீலி, அரிமா சங்கத் தலைவர் வி.ஆர்.நடராஜன், செயலாளர் ஆர்.முனியாண்டி, பொருளாளர் எல்.சாத்தப்பன் மற்றும் அரிமா சங்கத்தினர் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.