அப்போது அவர் கூறியதாவது: 2013-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதியுடன் முடிவடைந்த இரு ஆண்டுகளில் இந்தியாவில் யாரும் போலியாவால் பாதிக்கப்படவில்லை என்ற ஒரு மைல்கல்லை நாம் எட்டியுள்ளோம். உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை போலியோ இல்லாத நாடாக 2012-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி அறிவித்துள்ளது. 2009-ம் ஆண்டு உலக நாடுகளில், இந்தியாவில் போலியோ பாதி அளவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றைப் பார்க்கும் போது நாட்டு மக்களிடையே போலியோ குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. தொடர்ந்து அரசு ஆண்டிற்கு இரு முறை இலவசமாக கொடுக்கும் இந்த போலியோ சொட்டு மருந்தை 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தவறாமல் கொடுத்து போலியோ இல்லாத உலகத்தை உருவாக்க அனைவரும் உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் 151 மையங்களில் 6280 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.