விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் மெயின் பஜாரில் 3 மாத காலமாக மூடப்பட்டுள்ள கட்டண கழிப்பறையினைத் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றி பொதுமக்கள் சார்பில் தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்புக் கழக நகர அமைப்பாளர் பாண்டியன் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
மல்லாங்கிணரில் சுமார் 5 ஆயிரம் வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. அவற்றில் கழிப்பறை வசதி இல்லை. புதிதாக கழிப்பறை அமைக்க இடவசதியும் இல்லை. இப்பகுதி மக்களின் வசதிக்காக மெயின் பஜாரில் நவீன் கழிப்பறை அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திடீரென கழிப்பறை மூடப்பட்டது. கழிப்பறை மூடப்பட்டதால் இப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
உடனடியாக கட்டண கழிப்பறையினைத் திறக்க பேரூராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இது பற்றி பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்ட போது பதில் கூற மறுத்து விட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

"IPL பார்ப்பதுதான் அவர் வேலையா?" முதல்வரை விமர்சித்த அண்ணாமலை | DMK | BJP

தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

மெட்ரோ விவகாரத்தில் அமைச்சர்கள் பிடிஆர், மூர்த்தி பொய் பேசுகிறார்கள்: அண்ணாமலை

ஏப்ரல் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

